வெள்ளி, 2 செப்டம்பர், 2016

"பாண்டியர்களும் தமிழும்"

பாண்டிய மன்னர்கள் இல்லையென்றால் இன்று நாம் பேசுவதற்குத் தமிழ் மொழி இருந்திருக்காதோ என்று கூறத் தோன்றுகிறது.

தமிழுக்கு அழிவு வரும்போதெல்லாம் தங்கள் பலத்தால் தடுத்து நிறுத்தினர். எப்பொழுதும் ஆட்சியைவிட தமிழ் மொழியே பெரியதென வாழ்ந்தனர். பாண்டிய மன்னர்கள் பலரும் தமிழில் புலமை உடையவர்கள்.

கடைசங்க காலத்தில் ஆரியர்கள் தமிழையும் தமிழ் நாட்டையும் அழிக்க படையெடுத்து வந்தபோது அவர்களைச் சினம்கொண்டு அடக்கி வடக்கிலும் ஆட்சியை நிறுவியவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் இல்லயென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அழிந்திருக்கும்.

தமிழகத்தின் இருண்டக் காலமாக இருந்த களப்பிரர்கள் காலத்தில் (கிபி 3-7ம் நூற்றாண்டு) கடுங்கோன் பாண்டியன் களப்பிரர்களை விரட்டி கிபி 575ல் மதுரையில் முடி சூடினான். கடுங்கோன் இல்லையென்றால் 6ம் நூற்றாண்டிலயே தமிழ் அழிந்திருக்கும்.

2 முதல் 9ம் நூற்றாண்டுவரை சோழர்களைச் சிற்றரசர்களாக மாற்றி வைத்திருந்த பல்லவர்களையும் பண்டிய நாட்டுக்குள் விட வில்லை.
பல்லவர்களைத் தமிழ்நாட்டை விட்டு விரட்ட 850ல் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடந்த போரில் சிற்றரசர்களான சோழர்கள் பல்லவனுடன் இணைந்ததால் வெற்றி விளிம்பில் இருந்த பாண்டியர்கள் தோற்றனர். தமிழில் வடமொழி கலப்பு ஆரம்பித்தது. இல்லையென்றால் செந்தமிழ் இன்றும் இருந்திருக்கும்.

1216ல் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டு மீண்டும் தமிழை நிலைபெறச் செய்தான். சுந்தரபாண்டியன் வரவில்லையென்றால் முழுக்க வடமொழி கலப்புதான்.

இன்றளவும் தமிழ் மொழி இருக்க காரணம் பாண்டியர்கள். தங்கள் பெயரை நிலைபெறச் செய்ய போரிட்டதைவிட தமிழுக்காகவே போரிட்டனர். ஆட்சியை தக்கவைக்க சிற்றரசர்களாக இருந்ததும் இல்லை. பல்லவர் களப்பிரர்களுடன் கூட்டு சேர்ந்ததும் இல்லை. குப்தர்கள், மௌரியர்கள், சாளுக்கியர்கள் யாரையும் தமிழ்நாட்டுக்குள் விட்டதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக