செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கேளடா மானிடா..

ஒரு நாள் காலை வேலையில், பாரதியார் தன் வீட்டு திண்ணையில் வழக்கம் போல இயற்கையை ஆராதித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்தார். அந்த வேளையில், அத்திண்ணையில் சிதறிக்கிடந்த ஒரு சில அரிசி மணிகளை இரண்டு குருவிகள் கொத்தி தின்று கொண்டிருந்தன.

குருவியின் பசியைக் கண்ட பாரதியார், வீட்டிற்குள்ளே சென்று சோறு வடிக்க வைத்திருந்த அரிசி அனைத்தையும் கொண்டு வந்து, குருவிகள் இருந்த இடத்தில் தூவினார். அந்த கனம் அக்குருவிகள் பறந்தோடின. இதைக் கண்டு பாரதி கவலை கொண்டிருக்கும் வேளையில்... சென்ற அக்குருவிகள் இன்னும் பல குருவிகளைக் கூட்டிக்கொண்டு வந்து, கூட்டாக அந்த அரிசி மணிகளைத் தின்றன.

இதை ஈர்த்துப் பாரதியார் எழுதிய கவிதை தான்.குருவி மனிதர்களை ஏளனமாகப் பார்த்துப் பாடுவது போன்று...

"கேளடா...மானிடா...எம்மில் கீழோர் மேலோர் இல்லை... ஏழைகள் யாரும் இல்லை... செல்வம் ஏறியோர் எங்கும் இல்லை... வாழ்வுகள் தாழ்வும் இல்லை என்றும் மாண்புடன் வாழுமடா...கேளடா மானிடா.."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக