செவ்வாய், 31 அக்டோபர், 2017

அமெரிக்காவையே அதிர வைத்த தமிழன்.

விமானம் ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன்... அமெரிக்காவையே அதிர வைத்த தமிழன்.

அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.
இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்களைத் தவிர்த்துப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த விரும்பாத, அனுமதிக்காத ஒரே தமிழன்,
ஈழத்தமிழரான முல்லை மண்ணின் வாரிசு ரணேந்திரன் மட்டுமே. இவரைக் கர்வமாகச் சொல்லலாம் வேட்டி கட்டிய தமிழன் என்று.

இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.
தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில்,
'தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்'ஐ உருவாக்கியுள்ளேன்.

இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும்.
ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.

அதிர்வு

ரவிகரன் யோகேசுவரி ரணேந்திரன்

தமிழ் அறிவோம்...

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

தமிழறிவோம்.