வெள்ளி, 2 செப்டம்பர், 2016

தனிநாயக அடிகள்

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் கண்ட தனிநாயக அடிகள்.
(02-08-1913 - 01-09-1980)

உலகத் தமிழ் தூதராகத் திகழ்ந்தவர் தனிநாயக அடிகள்."யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்னும் பெரும்மொழியை "ஒன்றே உலகம்'' எனத் தம் உலக உலாவால் மெய்ப்பித்தவர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த தனிநாயக அடிகள் பள்ளிக் கல்வியை முடித்து கத்தோலிக்க கிருத்துவசமய குருவாக சேவை செய்யும் பொருட்டு உரோமையில் 19-3-1938 இல் குரு பட்டம் பெற்றார்.

உரோமையிலிருந்து திரும்பி தூத்துக்குடி அருகில் உள்ள வடக்கன் குளத்தில் ஆசிரிய பணி ஏற்றார்.பின்னர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழோடு ஆங்கிலம் முதலாக 13 மொழிகளை கற்று பன்மொழிப் புலவராக விளங்கினார்.
அடிகளாரின் முயற்சியாலேயே அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம் உருக் கொண்டது.அதன் தொடர்ச்சியாகவே 1964 இல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.

முதல் மாநாடு மலேசிய கோலாலம்பூரில் நடந்தது. சென்னை பாரீஸ் யாழ்பாணத்தில் நடந்த மாநாடுகளில் இவரின் பங்களிப்பு மிகுதியாகும்.

தமிழ் பண்பாடு என்னும் காலாண்டு இதழைத் தொடங்கி தமிழ் பண்பாட்டு கழக வாயிலாக நடத்தினார்.ஈழத் தமிழறிஞர் அருட் தந்தை தனிநாயகம் அடிகளாருக்கு நாம் நினைவஞ்சலி செலுத்துவோம்.

-கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக