சனி, 8 அக்டோபர், 2016

தந்தை மொழி தமிழ்..

ஒரு முறை சங்கராச்சாரியார் வடலூர் வந்து நம் வள்ளலார் பெருமானிடம் வாதிட்டார்!

சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய் பாஷை என்று பல்வேறு சான்றுகளை கூறி நீண்ட நேரம் உரையாற்றினார்!

அவர் பேசுவதை பொறுமையோடு  கேட்ட வள்ளலார் அவர் கூற்றை எதுவும்  மறுக்கவில்லை! ஆமோதித்தார் .

வரும்போது வள்ளலாரிடம் நிறைய வாதம் செய்யலாம் என எண்ணி வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது!

கூடியிருந்தவருக்கு வாத போர் நடக்கவில்லையே என்று ஏமாற்றம்!

சங்கராச்சாரியார் பேசி முடித்ததும் வள்ளலார், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே மறுபதற்கு
ஒன்றும் இல்லை எனவும் வந்தவர் பெருமகிழ்ச்சி அடைந்து ஆனந்த கூத்தாடினார்!

ஆனால் ஒன்று என்று வள்ளலார் கூறலானார்!

சமஸ்கிருதம் தாய் சரி தான்! தாய் என்று எப்போது அழைப்போம்? தந்தை என்று ஒருவர்
இருந்தால் அல்லவா தாய் என்று ஒருவள் இருக்க முடியும்!?  தந்தை மொழி தான் தமிழ் என்று கூறி தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்க
சங்கராச்சாரியார் உட்பட அனைவரும் முழு மனதோடு ஏற்று கொண்டனர்!

தம்மில் - நம்மில் அமிழ்ந்து இருப்பதால் இது தமிழ்!  தமிழே அதிவிரைவில் சுத்த சிவானு பூதியை நல்க வல்லது!
இது தெய்வீக தமிழ் மொழி என்று  கூறினார் திரு அருட்பிரகாச வள்ளலார்!

தமிழ் சங்கம் கண்டது, புலவர்களை மட்டுமல்ல!

ஞானிகளை சித்தர்களை தமிழ் கடவுள் முருக பெருமானை!

தமிழே ஞானம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக