வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஐயா.அப்துல் கலாமின் பொன்மொழிகள்!!!

பொன்மொழி 1

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால்,
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
   
பொன்மொழி 2

கனவு காணுங்கள்!
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் காண்பது அல்ல..
உன்னை தூங்க விடாமல்
செய்வதே (இலட்சிய) கனவு
   
பொன்மொழி 3

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,
எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
   
பொன்மொழி 4

நாம் அனைவருக்கும்
ஒரே மாதிரி திறமை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்,
அனைவருக்கும் திறமையை
வளர்த்துக் கொள்ள ஒரே
மாதிரி வாய்ப்புகள்
உள்ளன.
   
பொன்மொழி 5

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல...
உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
   
பொன்மொழி 6

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்,
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
   
பொன்மொழி 7

ஒரு முட்டாள் தன்னை முட்டாள்
என்று உணரும் தருணத்தில்
புத்திசாலியாகின்றான்.
ஆனால்,
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி
என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்
முட்டாளாகின்றான்
   
பொன்மொழி 8

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,
கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
   
பொன்மொழி 9

கஷ்டம் வரும் போது
கண்ணை மூடாதே,
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
அதை வென்றுவிடலாம்.
   
பொன்மொழி 10

உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே...
ஏனென்றால்,
கையே இல்லாதவனுக்கு கூட
எதிர்காலம் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக