l நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு
* தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது.
* வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
* சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும்
எவர்சில்வர் பயன்பாட்டிற்கு பிறகு வீடுகளில் பெருபாலானோர் இலையை, மறந்து தட்டுக்கு மாறியுள்ளனர். நகரங்களில்தான் வாழைமரம் வளர்த்து இலை பறிக்க எல்லோருக்கும் வாய்ப்பிருக்காது. வாய்ப்புள்ள கிராமங்களிலும் தட்டையே பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல வீட்டில் பெண்களுக்கும் சாப்பாட்டு தட்டு கழுவுகிற வேலை மிச்சம். நேரம் மிச்சம். பாத்திரம் கழுவுகிற தண்ணீர் மிச்சம். பாத்திரத்தை கழுவ பயன்படுத்தும் ராசயண சோப்பின் பயன்பாடு குறைவு என நன்மைகளை உணரமுடிந்தது.இலை, பாலீதீன் தாள்களைப் போல் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது இன்றைய விஞ்ஞான உலகுக்கு முக்கியச்செய்தி.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள
இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல்
ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.
முதலில் பருப்பு மற்றும்
நெய் ( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),
பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக