புதன், 30 ஆகஸ்ட், 2017

*நீங்கள் சைவமா? இல்லவே இல்லை!

இந்த உலகம் முரண்கள் நிறைந்தது.

சந்தைகளில் விற்கப்படும் பதப்படுத்திய சைவ உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க பன்றி இறைச்சி, கோழி கொழுப்பு, ஆடு மாடுகளின் எலும்பு இது போன்ற பல இறைச்சிகள் சைவ உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு தயாரான சைவ உணவுகளின் அட்டையில் வேறு பெயர்கள் கொண்டு அச்சடித்து விற்பனை செய்து ஏமாற்றி வரும் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஏராளமாக இருக்கின்றது.

வெள்ளை சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை என்று விற்கப்படும் சர்க்கரையில் ஆடு, மாடுகளின் எலும்புகளை இயற்கை கார்பன் என்ற பெயரில் சேர்க்கின்றார்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

கவர்ச்சியாக டப்பாகளில் கண்ணை கவரும் புகைப்படங்களோடு அடைக்கப்பட்டு விற்கும் ஆரஞ்சு ஜூஸ்களில் ஒமேகா 3 எஸ் சத்துக்கள் என்று கூறி, மீன்களின் மூலக்கூறுகளைக் கலந்து தயாரிக்கின்றார்கள்.

வெண்ணிலா ஐஸ்க்ரீம்

வெளிநாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் நேச்சுரல் ஃப்ளேவர் என்ற பெயர் கொண்ட வெண்ணிலா ஐஸ்க்ரீமில், நீர்நாயின் பின்புறத்தில் இருந்து எடுக்கப்படும் ஓர் மூலப்பொருளை சேர்க்கின்றார்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம் நீண்ட நாள் பழுக்காமல் பதப்படுத்தி வைப்பதற்கு, இறால் மற்றும் நண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்ப்ரேவை வாழைப்பழத்தின் மீது தெளிக்கின்றார்கள்.

சிவப்பு மிட்டாய்கள்

சிவப்பு நிற மிட்டாய்களில் கருஞ்சிவப்பு நிறத்தை அதிகமாக்க பெண் வகையைச் சார்ந்த Dactylopius coccus Costa எனும் நுண்கிருமியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனை carminic acid என்று கூறுகின்றனர்.

பீர் மற்றும் ஒயின்

பிரிட்டன் தயாரிப்பு பீர் மற்றும் ஒயின்களில், மீன்பசைக்கூழ் எனப்படும் ஓரு வகை மூலப்பொருளை மீன்களில் இருந்து பிரித்தெடுத்து சேர்க்கின்றார்கள்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் சுவையாக இருப்பதற்கு, கோழியில் இருந்து எடுக்கப்படும் கொழுப்புகளை உருளைக்கிழங்கு சிப்ஸில் கலந்து தயாரிக்கின்றார்கள்.

கேக் மிக்ஸ்

கேக் வகையில் கேக் மிக்ஸ் என்று ஒன்று இருக்கிறது. இதில் பன்றி இறைச்சி அல்லது பன்றி கொழுப்பை சேர்த்து தயாரிக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக